வீடியோ ஸ்டோரி
சென்னையில் கனமழை: 820 பம்புகளைக் கொண்டு நீரை அகற்றும் பணி தீவிரம் - ககன்தீப் சிங் பேடி
சென்னையில் கனமழை: 820 பம்புகளைக் கொண்டு நீரை அகற்றும் பணி தீவிரம் - ககன்தீப் சிங் பேடி
820 பம்புகளைக் கொண்டு நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
குறிப்பாக கடந்தமுறை பெய்த கனமழை பாதிப்பிலிருந்தே சென்னையின் பல்வேறு பகுதிகள் மீண்டுவர முடியாமல் இருந்தநிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது சென்னை. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டியளித்திருக்கிறார். அதில், 820 பம்புகளைக் கொண்டு நீரை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.