வீடியோ ஸ்டோரி
திருவள்ளூர்: பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் - 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
தாமரைப்பாக்கம் கூட்டு சாலை பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கு வசிக்கும் மக்கள் கூட்டு சாலையில் வரும் பேருந்துகள் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவருவது வழக்கம்.
இப்பகுதியில் வரும் பேருந்துகளை பயன்படுத்தி வரும் மக்கள், போதிய அளவில் பேருந்துகள் இயக்கபடுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பெரும் அவதியடைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாநகர பேருந்து நிலையம் அமைக்க விரைந்து நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.