அரிசிக்கொம்பன் யானைTwitter
வீடியோ ஸ்டோரி
அரிசிக்கொம்பன் யானை எங்கே?.. நடமாட்டத்தை இரவு பகலாக கண்காணிக்கும் வனத்துறையினர்!
அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் குற்றியாறு அணைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் யானை தற்போது முகாமிட்டுள்ளது. அரிசிக்கொம்பன் யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் உணவு, தண்ணீர் எடுத்துக்கொள்வதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
களக்காடு, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி வனக்கோட்ட ஊழியர்கள் இரவு பகலாக யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அரிசிக்கொம்பன் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் அதன் பயணப் பாதை கண்காணிக்கப்படுவதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.