கோவை : ராஜா ராணி சீரியலை பார்த்தபடியே வாகனத்தை ஓட்டியவருக்கு அபராதம்

கோவை : ராஜா ராணி சீரியலை பார்த்தபடியே வாகனத்தை ஓட்டியவருக்கு அபராதம்

கோவை : ராஜா ராணி சீரியலை பார்த்தபடியே வாகனத்தை ஓட்டியவருக்கு அபராதம்
Published on

கோவையில் செல்போனில் தொலைக்காட்சித் தொடரை பார்த்து ரசித்தபடியே, இருசக்கர வாகனத்தை இயக்கிய நபருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

கோவை நூறு அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ரத்தினபுரியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர், வாகனத்தின் முன்பகுதியில் இருந்த ஸ்டாண்டில் செல்போனை வைத்திருந்தார். அதில் தொலைக்காட்சி தொடரான ராஜா ராணி - 2-வை ரசித்தபடியே வாகனத்தை இயக்கினார்.

இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து, முத்துச்சாமியை அடையாளம் கண்ட போக்குவரத்து காவல் துறையினர், ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வாகனத்தில் இருந்த செல்போன் ஸ்டாண்டை பறிமுதல் செய்த அவர்கள், முத்துச்சாமிக்கு ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com