பழனி கோயிலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு 2-வது முறையாக நேர்ந்த தடங்கல்! #Video

பழனி கோயிலுக்கு நேற்று சென்றிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்றபின், அங்கே திடீரென கால் இடறியதால் தடுமாறிவிட்டார்.
PTR at Palani
PTR at PalaniPT Desk

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று சென்றிருந்தார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

Palani Temple
Palani TemplePT Desk

ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்ற அவர், சுமார் 20 படிக்கட்டுகள் ஏறி சென்று உச்சியை அடைந்தபோது, அங்கிருந்த கால்மிதி தடுக்கியதில் கால் இடறி சிறிது நேரம் நின்றுவிட்டார். பின்னர் சுதாரித்துவிட்டு, சில நிமிடங்கள் நின்றுவிட்டு பின்னர் ஆனந்த விநாயகரை கும்பிட்டார். பின் மூலவரை தரிசிக்கவும் பூஜையில் கலந்து கொள்ளவும் உள்ளே சென்றார்.

கடந்தமுறை இவர் பழனி கோயிலுக்கு சென்றபோதும் தடங்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த முறை பழனி கோயிலுக்கு நிதி அமைச்சர் பிடிஆர் சென்ற போது, திடீரென மின்சாரம் தடைப்பட்டு ரோப் காரில் அந்தரத்தில் சிறிது நிமிடங்கள் இருந்தார் அவர்.

நேற்று நடந்த சம்பவம், வீடியோ வடிவில்..

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com