\
திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது : ஓபிஎஸ்-ஈபிஎஸ் விமர்சனம்

திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது : ஓபிஎஸ்-ஈபிஎஸ் விமர்சனம்

திமுக புறவாசல் வழியாக வெற்றி பெற்றுள்ளது : ஓபிஎஸ்-ஈபிஎஸ் விமர்சனம்
Published on

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போதிலும் தோல்வியுற்றவர்களாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டவில்லை எனவும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை உள்நோக்கத்துடன் தாமதப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அதிமுக முகவர்கள் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தை திமுக தனது கைப்பாவையாக மாற்றி இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாகப் பெற்ற வெற்றி என்பதை கண்டிப்பாக சட்டத்தின் முன்பு வெளிப்படுத்துவோம் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com