வீடியோ ஸ்டோரி
அரசுப் பேருந்தை வழிமறித்து ஆக்ரோஷம் காட்டிய யானை
அரசுப் பேருந்தை வழிமறித்து ஆக்ரோஷம் காட்டிய யானை
நீலகிரி மாவட்டம் முதுமலையில் அரசு பேருந்தை யானை வழி மறித்ததோடு ஆக்ரோஷமாக விரட்டிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் இருந்து மாயார் செல்லும் அடர்ந்த வனப்பகுதி வழியிலான சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் நடுவே வந்த யானை, பேருந்தை வழிமறித்ததோடு ஆக்ரோஷமாக முன்னேறி வந்து விரட்டியது.
யானையின் செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். நல்வாய்ப்பாக யானை பேருந்தை சேதப்படுத்தாமல் வனத்திற்குள் சென்றது.