ஆக்ரோஷத்துடன் பிளிறியபடி துரத்திய யானை.. அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்!

ஆண் காட்டு யானை சாலையில் செல்வோரை திடீரென விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
யானை
யானைTwitter

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பகுதியில், சாலை ஓரம் நின்றிருந்த ஆண் காட்டு யானை, சாலையில் செல்வோரை திடீரென விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் மிகுந்து காணப்படும் சிறுமுகை -சத்தியமங்கலம் சாலை ஓரம் நீண்ட தந்தங்களுடன் யானை ஒன்று நின்றிருந்ததை அடுத்து இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர். சாலையை கடந்து செல்ல முயன்ற யானை, சாலையில் நின்றிருந்தவர்களை நோக்கி திடீரென்று கோபத்துடன் பிளிறியபடி ஓடிவந்தது. அதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். பின்னர் யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com