\
கேரளாவிலிருந்து வலசை பாதையில் நீலகிரிக்கு பயணம்: சிலிர்க்க வைக்கும் யானைக் கூட்டம்

கேரளாவிலிருந்து வலசை பாதையில் நீலகிரிக்கு பயணம்: சிலிர்க்க வைக்கும் யானைக் கூட்டம்

கேரளாவிலிருந்து வலசை பாதையில் நீலகிரிக்கு பயணம்: சிலிர்க்க வைக்கும் யானைக் கூட்டம்
Published on

கேரள மாநிலத்தில் யானைக் கூட்டம் வலசைப் பாதையில் பயணிக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

வயநாடு தேயிலை தோட்டத்தில் குட்டிகளுடன், 50 க்கும் மேற்பட்ட யானைகள் நீலகிரியை நோக்கி பயணிக்க தொடங்கியது. தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்குள்ள குட்டைகளில் தண்ணீர் அருந்தின. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்யக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக தங்களது குட்டிகளை பாதுகாக்க யானைகள் இடம் பெயர்வதாக யானை ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த யானைகள் கேரளா திரும்புவதற்கு குறைந்தது 6 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com