
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல நிறை குறைகள் நிறைந்திருக்கவே செய்கிறது. பலவிசயங்கள் கிடைத்திருக்கும். சில விசயங்கள் இன்னும் கிடைக்காமல் தாமதப்பட்டு கொண்டு இருக்கும். ஆனால் மனித இயல்பானது, ஏற்கெனவே இருப்பதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. அது எப்போதும் இல்லாதவற்றைக் குறித்துத் தான் யோசித்துக்கொண்டும், அதன் பின்னால் ஓடிக்கொண்டும் இருக்கிறது.
நமது தேவைகளை, ஆசைகளை, கனவுகளைத் துரத்திப் பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கான முக்கியத்துவத்தை நம்மிடம் இருப்பதற்கும் கொடுக்க வேண்டும். நம்மிடம் இருப்பது குறித்து அவ்வப்போது நினைத்துப் பார்ப்பது, அதற்கு அன்போடும், மரியாதையோடும் இருக்கவேண்டியதும் வாழ்வில் முக்கியம்.
சிலர் சிறிய வீட்டில் இருக்கலாம், குறைந்த வருமானத்தில் இருக்கலாம், நல்ல தரமான உயர்தர ஸ்மார்ட்போன், கேஜெட்டுகள் போன்றவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தற்போது உங்களிடம் இருப்பதுடன் மரியாதையாக நன்றியாக இருங்கள் என ஒரு வீடியோ நமக்கு உணர்த்திவிட்டு செல்கிறது.
முதியவர் ஒருவர் தனது அன்றாட சம்பாத்தியத்தை எண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பணத்தையும், காசுகளையும் அவர் பார்த்துப்பார்த்து எண்ணி பத்திரப்படுத்தும், சில நிமிடங்களே கொண்ட அந்த வீடியோ தற்போது இணைய வாசிகளின் இதயத்தைக் கனக்கச் செய்துள்ளது. அந்த வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.