\
ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஊர்ந்து சென்று முதல்வராக நான் என்ன பல்லியா? பாம்பா? - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
Published on: 

ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா, பாம்பா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.

எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன?” என கேள்வி எழுப்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com