புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக தருமபுரியில் வீடு இடிந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடுக்கான ஆணை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
தருமபுரியில் மழையால் வீடு இடிந்ததில் கந்தசாமி குடும்பத்தினர் 8 பேர் தவித்தது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியாகியிருந்தது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை பாதிக்கப்பட்ட கந்தசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷிணி தெரிவித்துள்ளார்