வீடியோ ஸ்டோரி
“துரை வைகோவிற்கு தகுதி உள்ளது; ஜனநாயக முறைப்படியே தேர்வாகியுள்ளார்” - வைகோ
“துரை வைகோவிற்கு தகுதி உள்ளது; ஜனநாயக முறைப்படியே தேர்வாகியுள்ளார்” - வைகோ
மதிமுகவில் துரை வைகோவிற்கு உயர்பொறுப்பு வழங்க வேண்டும் என தொண்டர்கள் விரும்பியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கட்சியில் 99 சதவீத மாவட்டச் செயலாளர்கள் துரை வைகோவிற்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
துரை வைகோவிற்கு கட்சியின் மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து, மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகினார். அது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், துரை வைகோவிற்கு தகுதி இருப்பதால் மட்டுமே அவருக்கு, கட்சியினர் பொறுப்பு வழங்கியுள்ளதாக வைகோ கூறியுள்ளார்.
வேறு எந்தக்கட்சியிலும் இல்லாத வகையில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தியே துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.