"ஜோதிமணி எம்.பி. குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" - செந்தில் பாலாஜி

"ஜோதிமணி எம்.பி. குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" - செந்தில் பாலாஜி
"ஜோதிமணி எம்.பி. குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" - செந்தில் பாலாஜி

கரூரில் கூட்டணி பங்கீடு தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறியது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கலந்தாலோசிக்காமல் வார்டு பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தனது அதிருப்தியை ஜோதிமணி தெரிவித்தார். இதுதொடர்பாக கேட்டதற்கு கூட்டத்தை விட்டு வெளியேறும்படி திமுகவினர் கூறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஜோதிமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தன்னை வெளியேற சொல்வது தான் திமுகவின் கூட்டணி தர்மமா என ஆவேசமாக குரல் எழுப்பினார்.

இதனிடையே காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு பங்கீடு தொடர்பான ஆலோசனை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கரூரில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும், இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com