எடப்பாடியில் வைத்து புகழேந்தியை தாக்க முயற்சி செய்த EPS ஆதரவாளர்கள்? பரபரப்பு வீடியோ!

எடப்பாடியில் நேற்று முன்தினம் இரவு ஓபிஎஸ் அணி சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய பெங்களூர் புகழேந்தியை அதிமுகவினர் தாக்க முயற்சி செய்த வீடியோ வெளியாகி உள்ளது.
புகழேந்தி
புகழேந்திPT
Published on

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று முன்தினம் இரவில் ஓபிஎஸ் ஆதரவாளர் அணி சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கு.பா. கிருஷ்ணன், பிரபாகரன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையிலான அதிமுகவினர், ஓபிஎஸ் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்குள் புகுந்து ரகளை செய்ய முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி வெளியேற்றினர்.

இதில் ஆத்திரமடைந்த அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 50க்கு மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்த நிலையிலும், மீதமிருந்த 50-க்கும் மேற்பட்டோர் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் மண்டபத்திற்கு முன் கூடியிருந்து, அப்போது ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த பெங்களூரு புகழேந்தியை தாக்க முற்பட்டதோடு தகாத வார்த்தைகளால் வசை பாடினார்கள்.

புகழேந்தி
புகழேந்தி

அப்போது கார் கண்ணாடி உயர்த்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெங்களூர் புகழேந்தி தப்பி சென்றார். இந்நிகழ்வின் காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கெனவே எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இப்படி தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் போலீசாரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com