\
திரையரங்கு சென்றால் கொரோனா பரவாதா? - அண்ணாமலை கேள்வி

திரையரங்கு சென்றால் கொரோனா பரவாதா? - அண்ணாமலை கேள்வி

திரையரங்கு சென்றால் கொரோனா பரவாதா? - அண்ணாமலை கேள்வி
Published on

”கோயிலுக்குப் போனால் கொரோனா வரும் என்றால், ஏன் திரையரங்கு சென்றால் கொரோனா வராதா?” என்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கேள்வியெழுப்பியுள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “திரையரங்குகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க தமிழக அரசு மறுக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தனது ஒவ்வொரு படத்தையும் சமூக வலைதளங்களில் புரொமோட் செய்கிறார். இதனை செய்யும் அரசு ஏன் கோயில்களை மூடவேண்டும். கோயிலுக்குப் போனால் கொரோனா வரும் என்றால், ஏன் திரையரங்கு சென்றால் கொரோனா வராதா? பள்ளிக்குச் சென்றால் கொரோனா வராதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com