\
சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
Published on

சோழிங்கநல்லூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் முருகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கோவிலம்பாக்கம், கண்ணகி நகர், சிறுசேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

கடந்த 24 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் பரப்புரையை தொடங்கிய விஜயகாந்த் அடுத்த 2 நாட்கள் சென்னையில் சேத்துப்பட்டு, புளியந்தோப்பு, வில்லிவாக்கம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

கடந்த சனிக்கிழமை திருத்தணி, கொள்ளத்தூர் பேட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த விஜயகாந்த், ஐந்தாவது நாளான நேற்று சோழிங்கநல்லூர் தொகுதியில் வாகனத்தில் இருந்தவாறே மக்களிடம் இருகரம் கூப்பி வாக்கு சேகரித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com