தொண்டர்களை பார்த்து கை அசைத்த விஜயகாந்த்! - விண்ணை பிளந்த விசில் சத்தம்

தொண்டர்களை பார்த்து கை அசைத்த விஜயகாந்த்! - விண்ணை பிளந்த விசில் சத்தம்

தொண்டர்களை பார்த்து கை அசைத்த விஜயகாந்த்! - விண்ணை பிளந்த விசில் சத்தம்
Published on

கும்மிடிப்பூண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கு தொண்டர்களை நேரில் சென்று சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விஜயகாந்த் பரப்புரையில் இறங்கியுள்ளார். இன்று கும்மிடிப்பூண்டியில் பரப்புரையில் இறங்கிய அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தபோது விண்ணை பிளக்கும் அளவிற்கு விசில் சத்தம் எழுப்பி தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com