“எங்க அப்பாவோட ஆசைங்க!” - ‘தளபதி 68’ பற்றி பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு #Video

நடிகர் விஜய் நடிக்கவுள்ள 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியது.
vijay
vijaypt desk

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நடிகர் விஜய்யின் 68 வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய்ண்ணா! சொன்ன மாதிரியே பட அறிவிப்புக்குப் பிறகுதான் ஃபோட்டோ ஷேர் செய்கிறேன்” என்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஜய்யுடன் எடுத்துக் கொண்டு செல்ஃபியை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்திருந்தார் வெங்கட்பிரபு. அப்போது செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல வந்த வெங்கட் பிரபு, சற்று கலாயாக பேசினார். “ரொம்ப ஹேப்பி... எல்லா அப்டேட்டும் லியோவுக்கு அப்பறமா வரும்” என கழுவிய மீனில் நழுவிய மீனாய் நழுவிச்செல்ல முயன்றார் வெங்கட்பிரபு.

அப்படியான நிலையில் செய்தியாளர் ஒருவர் “கொஞ்ச நாளைக்கு முன்னாடி கங்கை அமரன் சார் சொன்னார், விஜய் சாரும் அஜித் சாரும் இணைந்து நடிக்க வேண்டுமென்று... உங்களோட படத்தில் அது நடக்குமா?” என கேட்கவே, “ஏங்க... அது எங்க அப்பாவோட ஆசை” என கலாய்த்தார் வி.பி!

தொடர்ந்து அவரிடம், செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு, “இல்லங்க அதெல்லாம் ஒன்னும் கிடையாது. எல்லாமே சஸ்பென்ஸ்தான்” என ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டு கடந்து சென்றார்.

வெங்கட்பிரபுவின் பேட்டியை, இங்கே காண்க...

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com