\
திண்டுக்கல்: காதலியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

திண்டுக்கல்: காதலியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்

திண்டுக்கல்: காதலியை அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்
Published on

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காதலியை பார்க்கச் சென்ற காதலன் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பட்டியை சேர்ந்த பாரதிராஜா என்பவர், மூங்கில்பட்டி முல்லை நகரைச் சேர்ந்த பரமேஸ்வரியை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பரமேஸ்வரியின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். மேலும் பரமேஸ்வரியை வேறு ஒருவருக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாரதிராஜா, தனது நண்பர்கள் உதவியுடன் பரமேஸ்வரியை தனியாக வரவழைத்து தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் அவர்களை மடக்கிய பரமேஸ்வரியின் குடும்பத்தார். தகராறில் ஈடுபட்டனர். இதில், வாக்குவாதம் முற்றியதில் பரமேஸ்வரியின் அண்ணன் மலைச்சாமி கல்லால் பாரதிராஜாவை தாக்கியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த பாரதிராஜா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com