நெகிழிக்கு மாற்றாக உள்ள பொருட்களின் தேவை அதிகரிப்பு

நெகிழிக்கு மாற்றாக உள்ள பொருட்களின் தேவை அதிகரிப்பு

நெகிழிக்கு மாற்றாக உள்ள பொருட்களின் தேவை அதிகரிப்பு
Published on

நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துவரும் நிலையில், அதற்கு மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தொழிலில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

மனிதன் இயற்கையை மறந்து செயற்கையை தேடிச்சென்றதன் விளைவுதான், தற்போது நெகிழிப் பொருட்களால் நாம் சந்திக்கும் பிரச்னைகள். புவியின் சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றான நெகிழிப் பொருட்களை முற்றிலும் தடைவிதிக்கும் முயற்சியை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு அடுத்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், தற்போது நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. பாக்கு மட்டை, வாழை மட்டை, தேங்காய் நார் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தற்போது பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால், நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்கள் தயாரிப்பில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்திருப்பதாக கூறுகிறார், 25ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் பாபு.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் சிறு தொழில் முனைவோருக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகளவில் உள்ளதால், இத்தொழிலில் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கின்றனர். மாவட்ட தொழில் மையம், மத்திய அரசின் முத்ரா திட்டம் மூலமாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிலுக்காக, கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்திய கைவினைப்பொருட்கள் ஆணையம், மத்திய கயிறு வாரியமும் இத்துறை சார்ந்து கடன் வழங்க பரிந்துரை செய்கின்றன. இத்தொழில் மூலமாக, பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைவது மட்டுமல்லாது, சுற்றுச்சூழலைக் காக்கும் பொறுப்பிலும் பங்கெடுப்போம் என்ற திருப்தியை அடையலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com