வீடியோ ஸ்டோரி
மாற்றி மாற்றி ஊழல் புகார் : எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அனல் பரப்புரை
மாற்றி மாற்றி ஊழல் புகார் : எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் அனல் பரப்புரை
மாற்றி மாற்றி ஊழல் புகார்களை தெரிவித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார்கள். திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி கடுமையாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதுபோலவே, இந்த இரு கட்சிகளின் மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல் ஆகியோர் புகார்களை கூறி பரப்புரை செய்து வருகிறார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போது பல வேட்பாளர்கள், வித்தியாசமான முறையில் மனுத்தாக்கலை செய்ததும் கவனத்தை ஈர்த்தது.