வீடியோ ஸ்டோரி
'கூட்டம் கூடுவதாலேயே கொரோனா அதிகரிக்கிறது' - சுகாதாரத்துறை செயலாளர்
'கூட்டம் கூடுவதாலேயே கொரோனா அதிகரிக்கிறது' - சுகாதாரத்துறை செயலாளர்
கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கூட்டம் கூடுவதாலேயே தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக சென்று கூறியும் சிலர் முன்வருவதில்லை. பெரும்பாலானோர் முகக் கவசம் அணிவதில்லை; கைகளை முறையாக கழுவுவது இல்லை'' என்று அவர் தெரிவித்தார்.