கொரோனா கால மகத்துவர்: திருமணச் செலவில் ஆதரவற்றோருக்கு உதவிய புதுமண தம்பதி

கொரோனா கால மகத்துவர்: திருமணச் செலவில் ஆதரவற்றோருக்கு உதவிய புதுமண தம்பதி
கொரோனா கால மகத்துவர்: திருமணச் செலவில் ஆதரவற்றோருக்கு உதவிய புதுமண தம்பதி

திருமணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்பது சொல்லப்படாத விதியாகவே இருந்துவருகிறது. கடன் வாங்கியாவது ஆடம்பரமாக திருமணத்தை நடத்திய பலர் இங்கு உண்டு. ஊரடங்கு காலத்தில் எளிமையாக திருமணம் நடப்பதை எண்ணி வருந்துபவர்களுக்கு மத்தியில், திருமணத்திற்கான பணத்தை ஒரு ஜோடி செலவு செய்த வழி அளப்பரியது.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் தமிழ், பாண்டி மீனா ஜோடிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பலரைப் போலவே திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என எண்ணியிருந்த அவர்களது கனவை, முழு பொதுமுடக்கம் கலைத்துவிட்டது. தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, நாடோடி குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றது. திருமணம் முடித்தக் கையோடு மாலையும் கழுத்துமாக சென்ற மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து மேள தாளத்துடன் நாடோடி குடும்பங்கள் வரவேற்பு அளித்தனர்.

சாலையோரத்தில் வசிக்கக் கூடிய சாட்டையடித்து வாழும் 20 நாடோடி குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறி-பழங்களை புதுமண தம்பதி வழங்கியது. ஆடம்பரமாக திருமணம் செய்வதற்காக வைத்திருந்த பணத்தில் ஆதரவற்றோருக்கு உதவிய புதுமண தம்பதியின் செயல் போற்றுதலுக்குரியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com