வீடியோ ஸ்டோரி
3 மாத இடைவேளைக்குப் பிறகு முதல்வர் மீண்டும் சைக்கிள் பயிற்சி
3 மாத இடைவேளைக்குப் பிறகு முதல்வர் மீண்டும் சைக்கிள் பயிற்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 மாத இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.
சனி, ஞாயிறுகளில் உடற்பயிற்சிக்காக, இ.சி.ஆர். சாலையில் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த முதல்வர், கடைசியாக கடந்த ஜூலை 4ஆம் தேதி முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளிங் செய்தார். இந்நிலையில் இன்று, சைக்கிள் ஓட்டியபடி மாமல்லபுரம் வந்த அவர், தனியார் உணவகத்தில் தேநீர் அருந்திவிட்டு திரும்பினார்.
இதனை முன்னிட்டு, இ.சி.ஆர். சாலையின் முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதேசமயம், வழக்கமான வாகனப் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.