வீடியோ ஸ்டோரி
புதுக்கோட்டை: பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் சிறார்கள்
புதுக்கோட்டை: பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் சிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பாம்பாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆட்டம் போட்டனர்.
திருப்புனவாசலில் இருக்கும் பாம்பாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திருப்புனவாசலில் இருந்து ஓரியூர் செல்லும் மக்கள் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். மழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.