கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில், விழிப்புணர்வு பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை, முதலமைச்சர் ஸ்டாலின் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

3ஆவது அலையை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு, கையெழுத்து இயக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இறுதியாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எல்.இ.டி பொருந்திய பிரசார வாகனத்தை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com