வீடியோ ஸ்டோரி
1,01,474 பேருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை - தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
1,01,474 பேருக்கு ஓய்வூதியம் வழங்க அரசாணை - தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சமூக பதுகாப்புத் திட்டங்களின்கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 33,31,263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், புதிதாக 1,01,474 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆணைகள் வழங்குவதற்கு அடையாளமாக 10 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார். இந்த ஒய்வூதிய திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.