\
சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் சிட்கோ தொழில் மனைகளின் விலையை குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

சிட்கோ தொழில் மனைகளை தொழில் முனைவோர் எளிதில் வாங்கிடும் வகையில் விலையை குறைத்து தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி கோவை குறிச்சியில் ஒரு ஏக்கர் மனை விலை ரூ. 9 கோடியில் இருந்து ரூ. 4.8 கோடி குறைத்து ரூ.4.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு ஆலத்தூரில் ரூ. 6 கோடியில் இருந்து ரூ. 2.5 கோடி குறைத்து ரூ.3.5 கோடியாகவும், ஈரோடு தொழில் பேட்டையில் ரூ. 6.4 கோடியில் இருந்து ரூ. 2.6 கோடி குறைத்து ரூ.3.8 கோடியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com