\
மதுபோதையில் நிர்வாணமாக நின்று தலைமைக் காவலர் அட்டூழியம்

மதுபோதையில் நிர்வாணமாக நின்று தலைமைக் காவலர் அட்டூழியம்

மதுபோதையில் நிர்வாணமாக நின்று தலைமைக் காவலர் அட்டூழியம்
Published on

சென்னை அம்பத்தூரில் தலைமை காவலர் ஒருவர் மதுபோதையில் நிர்வாணமாக அக்கம் பக்கத்தினருடன் சண்டையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரகடம் ஏ.கே.பெரியார் குறுக்கு தெருவைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். கோயம்பேடு போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். கிருஷ்ணகுமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முருகேசன் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

காவலருக்கு மதிப்பளித்து மதுபோதையிலிருக்கும் அவருடனான மோதலை தடுக்கும் விதமாக முருகேசன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். முருகேசன் இல்லாததை அறிந்த தலைமை காவலர் கிருஷ்ணகுமார், முருகேசனின் மனைவியை ஆபாசமாக திட்டியது மட்டுமல்லாமல் சண்டையிட்டுள்ளார். மேலும் ஆடைகளை களைந்து அரைநிர்வாணமாக முகம் சுழிக்கும்படி நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com