சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்ற பகுதிகளின் நிலை என்ன?

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்ற பகுதிகளின் நிலை என்ன?
சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்ற பகுதிகளின் நிலை என்ன?

சென்னை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர், மாம்பலத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஸ்மார்ட் சிட்டி பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியதை இந்த மழை காட்சிப்படுத்தியிருக்கிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்ஓசி தி.நகர் நிலப்பரப்பில் 2071 கிலோமீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்கள் உள்ளன. இந்த வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு அதில் 771 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் சனிக்கிழமை இரவு தொடங்கி ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே சென்னையின் பிரதான சாலைகள் முதல் தெருக்கள் வரை முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிவிட்டன.

சென்னை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்கள் மேம்பாட்டிற்காக கடந்த 3 வருடங்களில் 110 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் விதிவிலக்கல்ல. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொருட்கள் வீணாகியிருப்பதோடு, சமைத்து சாப்பிட முடியாமலும், கழிவறை வசதிகளையும் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாம்பலம் கால்வாயை மீட்டெடுக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அந்த பணி இன்னும் முடியாமல் உள்ளது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்று சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் ராஜேந்திரனிடம் கேட்டோம், “ தற்போது சிலமணி நேரத்திற்குள் பெய்யும் அதிக மழையை தாங்கக்கூடிய அளவில் இல்லாததே சென்னை மாநகரின் தற்போதைய நிலைக்கு காரணம் என்றும், 2015 பெருவெள்ளத்தில் கற்ற பாடத்தை உணர்ந்து, தொலைநோக்கு பார்வையுடன் மழைநீர் மேலாண்மைக்காக புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com