\
சென்னை: வளசரவாக்கத்தில் இலவச கரும்பு பெற ஊரடங்கை மீறி ஒன்று கூடிய பொதுமக்கள்

சென்னை: வளசரவாக்கத்தில் இலவச கரும்பு பெற ஊரடங்கை மீறி ஒன்று கூடிய பொதுமக்கள்

சென்னை: வளசரவாக்கத்தில் இலவச கரும்பு பெற ஊரடங்கை மீறி ஒன்று கூடிய பொதுமக்கள்
Published on

சென்னை வளசரவாக்கம் போலீஸ் எல்லைக்குட்பட்ட காரம்பாக்கம் பகுதியில் நபர் ஒருவர் லாரியில் கரும்பு கொண்டுவந்து வழங்குவதாக ககவல் கிடைத்ததை அடுத்து இலவச கரும்பு வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் இலவச கரும்பை பெற கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டு வெளியே வந்தனர் பொதுமக்கள்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் அதன் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சி மண்டலம் 7க்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை மாநகராட்சி அதிகாரிகளும்,போலீசாரும் கண்டுகொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com