குயின்ஸ்லாண்ட் பூங்கா கோயில் நிலம் என உறுதிப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

குயின்ஸ்லாண்ட் பூங்கா கோயில் நிலம் என உறுதிப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

குயின்ஸ்லாண்ட் பூங்கா கோயில் நிலம் என உறுதிப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னையை அடுத்துள்ள குயின்ஸ்லாண்ட் பூங்கா நிலம், சட்டப் போராட்டம் நடத்தி கோயில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலகர்களுடன் அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில், 5 நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது. அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்க சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com