\
வெள்ள நீரில் மிதக்கும் கூடுவாஞ்சேரி பகுதி... தவிக்கும் மக்கள்

வெள்ள நீரில் மிதக்கும் கூடுவாஞ்சேரி பகுதி... தவிக்கும் மக்கள்

வெள்ள நீரில் மிதக்கும் கூடுவாஞ்சேரி பகுதி... தவிக்கும் மக்கள்
Published on

தொடர்மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்கள், மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com