”சதுரகிரி மலைக் கோயிலுக்குச் சென்றுவர அடிப்படை வசதிகள் இல்லை” - பக்தர்கள் குற்றச்சாட்டு

விருதுநகா மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் சென்றுவர அடிப்படை வசதிகள் இல்லையென பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் சுமார் 4 ஆயிரத்தி 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. முக்கியமான தினங்களில் மட்டுமே ப்கதர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படவிலலை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, கோயில் அமைந்துள்ள பகுதி மேகமலை புலிகள் சரணாலயத்திற்கு கீழ் வருவதால் வனத்தில் கட்டடங்கள் கட்ட இயலவில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com