"அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்ங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மதுரவாயல், விருகம்பாக்கம், ஈக்காடுதாங்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com