கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தகவல்கள் கசிந்ததா? மத்திய அரசு சொல்வதென்ன?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தகவல்கள் கசிந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கோவின் செயலி மூலம் கசிந்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகித் கோகுலே நேற்று குற்றம் சாட்டியிருந்தார். கசிந்த விவரங்களில், நாடாளுமன்றம் சட்டமன்ற உறுப்பினர்களின் விவரங்களும் அடங்கும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இக்குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com