\
லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாட்டம்

லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாட்டம்

லண்டனில் வரும் தை மாதம் தமிழ் மரபுரிமை மாதமாக கொண்டாட்டம்
Published on

லண்டனில் தமிழ் மொழியையும், கலைகளையும் கொண்டாட வழிவகை செய்யும் திட்டத்துக்கு மாநகர நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆண்டுதோறும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக கடைபிடிக்கப்படும் என லண்டன் மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது. லண்டன் நகர பேரவையில் கன்சர்வேட்டிவ் உறுப்பினர் நிக் ரொஜர்ஸ் தமிழ் மரபுரிமை மாதத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

எனவே வரும் தை மாதம், தமிழ் மரபுரிமை மாதமாக லண்டனில் கடைபிடிக்கப்பட்டு தமிழ் மொழி, பண்பாடு, கலை ஆகியவற்றை கொண்டாடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏற்கெனவே கனடாவில் இதேபோல தமிழ் மரபுரிமை மாதம் கொண்டாடப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com