மதுபோதையில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய ரவுடிகள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

மதுபோதையில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய ரவுடிகள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
மதுபோதையில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய ரவுடிகள்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒயின்ஷாப்பில் ரவுடிகள் அப்பாவி இளைஞர்களை பீர் பாட்டில் கொண்டு தாக்கும் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் விநாயகம். 21 வயதான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்வம் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரியும் கடையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அருகில் இருக்கிற அரசு மதுபானக் கடையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு வந்த போதை ஆசாமிகள் விநாயகத்திடம் வீண் தகராறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் விநாயகம் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் விநாயகத்தை சராமாரியாக தாக்கியிருக்கின்றனர்.

பின்னர் மதுபானக்கடையில் மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டில்களை வரிசையாக எடுத்து அவர் தலையிலே அடித்துள்ளனர். இதில் காயமுற்ற விநாயகம் மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவையனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவாகியிருந்தது. அதில் மதுபான பாரில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் விநாயகத்திடம் போதை ஆசாமிகள் இருவரும் வீண் தகராறு செய்வதும், மஞ்சள் சட்டை அணிந்துள்ள நபர் அடித்து கீழே தள்ளுவதும், பின்னர் எதற்காக அடித்தாய் என விநாயகம் கேட்கும்போது இருவரும் சேர்ந்து சராமாரியாக தாக்கி பீர் பாட்டில்களால் தாக்கக்கூடிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் மங்களாபுரத்தை சேர்ந்த நித்யவேல் மற்றும் அவரது கூட்டாளி இருவரும் சேர்ந்து தாக்கியதும், நித்யவேல் மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அங்கிருந்து தப்பியோடிய இருவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com