சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெண் பயணி ஒருவர், பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்றபோது, நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
உடனே பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண்ணை சக பயணிகள், ஓட்டுநர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.