2 தவணை தடுப்பூசிகள் செலுத்திய பின்னும் கொரோனா தொற்று வருவது ஏன்? நிபுணர்கள் சொல்வது என்ன?

2 தவணை தடுப்பூசிகள் செலுத்திய பின்னும் கொரோனா தொற்று வருவது ஏன்? நிபுணர்கள் சொல்வது என்ன?
2 தவணை தடுப்பூசிகள் செலுத்திய பின்னும் கொரோனா தொற்று வருவது ஏன்? நிபுணர்கள் சொல்வது என்ன?

கொரோனாவுக்கு எதிரான போரில் 2 தவணை தடுப்பூசிகள் மற்றும் கூடுதல் தவணை தடுப்பூசி போட்டால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கும் நிலையில், கொரோனா தொற்றே ஏற்படாமல் முழுமையாக கட்டுப்படுத்தும் அளவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமா ? நிபுணர்கள் சொல்வது என்ன? பார்க்கலாம்.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்டு தற்போது வரை உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துவரும் கோவிட் 19, டெல்டா, ஒமைக்ரான், என பல திரிபுகளுடன் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஓமைக்ரானால் இதுவரை தமிழகத்தில் உயிரிழப்புகள் 0.5% ஐ தாண்டவில்லை என்பதே தடுப்பூசியின் வெற்றியாகக் கூறுகிறது மருத்துவ உலகம். எனினும், கொரோனா தொற்றே ஏற்படாமல் இருக்க தடுப்பூசி கண்டறிய முடியாதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இதே கருத்தைத் தெரிவிக்கும் தமிழக கோவிட் நிபுணர் குழுவில் ஒருவராகிய தொற்றுநோய் நிபுணர் குகானந்தம் , உருமாறிக் கொண்டே இருக்கும் கொரோனா வைரசை ஒரே ஒரு தடுப்பூசி போட்டு வராமல் தடுக்க முடியாது என்கிறார்.

போலியோ போல ஒரே தவணை தடுப்பூசியில் வராமல் தடுக்கக்கூடிய தடுப்பூசிக்கான ஆய்வில் உலகம் முழுவதும் ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை அழிக்க இயலாத, தடுப்பூசி கண்டறியப்படாத டெங்கு உள்ளிட்ட பல நோய்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் அறிவியலும், ஆய்வும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்கையில் தீர்வு கிடைக்குமென நம்புவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com