\
பழனி: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை.. புளியம்பட்டி மக்கள் மகிழ்ச்சி!

பழனி: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை.. புளியம்பட்டி மக்கள் மகிழ்ச்சி!

பழனி: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை.. புளியம்பட்டி மக்கள் மகிழ்ச்சி!
Published on: 

பழனியில் இருந்து புளியம்பட்டிக்கு செல்லும் பேருந்து சேவை ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. நெய்க்காரப்பட்டி, சின்ன காந்திபுரம் வழியாக  புளியம்பட்டிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழியாக பேருந்து சேவையை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் தொடங்கி  வைத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com