வீடியோ ஸ்டோரி
சத்தீஸ்கர்: 12அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மணமக்கள்
சத்தீஸ்கர்: 12அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மணமக்கள்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, 12அடி உயரத்தில் மணமக்கள் அமர்ந்திருந்த ஊஞ்சல் அறுந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராய்ப்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மணமேடையில் இருந்து 12அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில் மணமக்கள் நின்றவாறு அனைவரையும் பார்த்து கை அசைத்தனர். சிறிது நேரத்தில் ஊஞ்சலின் ஒருபக்கத்தின் கயிறு அறுந்து விழுந்தது. மணமக்கள் தவறி விழுந்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ஊஞ்சலை சுற்றி நடத்தப்பட்ட வானவேடிக்கைகளே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.