பொங்கல் பண்டிகையையொட்டி விறுவிறுப்பாக நடைபெறும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு

பொங்கல் பண்டிகையையொட்டி விறுவிறுப்பாக நடைபெறும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு
பொங்கல் பண்டிகையையொட்டி விறுவிறுப்பாக நடைபெறும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 17 ஆயிரம் பேர் பயணச்சீட்டுகளை பதிவு செய்திருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் மட்டுமின்றி கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, அவை இயக்கப்பட உள்ள இடங்களின் விவரங்கள் குறித்து இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com