வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி! வைரல் வீடியோ!

வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி! வைரல் வீடியோ!
வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்த பா.ஜ.க. எம்.பி! வைரல் வீடியோ!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி ஒருவர், கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அம்மாநிலத்தின் ரேவா தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா இம்மாதம் 22-ஆம் தேதி தனது தொகுதியில் உள்ள கஜூஹா (Khajuha) என்ற கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளி ஒன்றில் மரம் நடும் விழாவில் பங்கேற்கச் சென்றுள்ளார்.

அப்போது பள்ளியில் உள்ள ஒரு கழிவறை அசுத்தமாக இருப்பதை ஜனார்தன் மிஸ்ரா பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து கையுறைகள், பிரஷ்கள் உள்ளிட்ட எந்த உபகரணங்களும் இல்லாமல் தண்ணீரை மட்டும் பயன்படுத்தி தனது கைகளால் கழிவறையைச் சுத்தம் செய்ய துவங்கியுள்ளார் ஜனார்தன் மிஸ்ரா. அவர் இவ்வாறு கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்த சம்பவம் அங்கிருந்த சில நபர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு ஜனார்தன் மிஸ்ராவின் ட்விட்டர் பக்கத்தின் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில் தூய்மையை நோக்கி மக்களை ஊக்குவிக்கும் வகையில் கழிவறையை சுத்தம் செய்ததாக ஜனார்தன் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். “ஒவ்வொருவரும் தூய்மையை பராமரிக்க வேண்டும். மகாத்மா காந்தி முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை தூய்மை பற்றிய செய்தியை வழங்கியுள்ளனர். தூய்மையை நோக்கி மக்களை ஊக்குவிக்கும் வகையில் கழிவறையை சுத்தம் செய்தேன்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com