\
"நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு இபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தேன்" - அண்ணாமலை

"நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு இபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தேன்" - அண்ணாமலை

"நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு இபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தேன்" - அண்ணாமலை
Published on: 

அதிமுக குறித்து பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் கூறிய கருத்துக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், அனைத்து கஷ்டங்களிலும் பாஜகவுடன் அதிமுக நின்றது எனவும், முக்கிய சட்டங்கள் வரும்போதெல்லாம் அதிமுக உடன் நின்றது எனவும், இயற்கையான உறவில் சலனம் வரக்கூடாது என்பதே நிலைப்பாடு என்றும் தெரிவித்த அவர், நயினார் நாகேந்திரன் வார்த்தை தவறுதலாக பேசிவிட்டார் என்றும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com