‘எழுந்து நடக்கவே முடியவில்லை’; ஆனால் திருமண விழாவில் குத்தாட்டம்- சர்ச்சையில் பிரக்யா சிங்

‘எழுந்து நடக்கவே முடியவில்லை’; ஆனால் திருமண விழாவில் குத்தாட்டம்- சர்ச்சையில் பிரக்யா சிங்
‘எழுந்து நடக்கவே முடியவில்லை’; ஆனால் திருமண விழாவில் குத்தாட்டம்- சர்ச்சையில் பிரக்யா சிங்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக காரணம் காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்ற போபால் எம்.பி.பிரக்யா சிங் தாக்கூர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் பிரக்யா மீது 4 ஆயிரம் பக்கங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், எழுந்து நடக்க முடியாத அளவிற்கு உடலில் பிரச்னை உள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார். நீதிமன்றமும் அவருக்கு விலக்கு அளித்த நிலையில், சில தினங்களுக்கு முன் பிரக்யா சிங் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரக்யா திருமண விழாவில் உற்சாக நடனமிட்ட வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரக்யாவின் செயலை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com