அம்பத்தூரில் காணமல் போன குழந்தை 'லாக்டவுன்' கோயம்பேட்டில் மீட்பு - கடத்தலா? என விசாரணை

அம்பத்தூரில் காணமல் போன குழந்தை 'லாக்டவுன்' கோயம்பேட்டில் மீட்பு - கடத்தலா? என விசாரணை
அம்பத்தூரில் காணமல் போன குழந்தை 'லாக்டவுன்' கோயம்பேட்டில் மீட்பு - கடத்தலா? என விசாரணை

சென்னை அம்பத்தூரில் காணாமல் போன 'லாக்டவுன்' என பெயரிடப்பட்ட குழந்தை, இரண்டு நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டது.

அம்பத்தூர் காந்திநகரில் கட்டட பணியில் ஈடுபட்டு வந்த ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர்- புத்தினி தம்பதியின், லாக்டவுன் என்ற பெயர்கொண்ட ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனது. இதுகுறித்த புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியபோதும் குழந்தை குறித்து காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் அரசு பேருந்தில் குழந்தை ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பேருந்து நடத்துனர் குழந்தையை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில் அக்குழந்தைதான், தேடப்படும் குழந்தை லாக்டவுன் என்பது தெரியவந்தது. குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு குழந்தை சென்றது எப்படி? கடத்தியவர்கள் விட்டுச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com