ஜெய் பீம் படக்குழுவினருக்கு சிபிஎம் சார்பில் பாராட்டு விழா

ஜெய் பீம் படக்குழுவினருக்கு சிபிஎம் சார்பில் பாராட்டு விழா

ஜெய் பீம் படக்குழுவினருக்கு சிபிஎம் சார்பில் பாராட்டு விழா
Published on

ஜெய் பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா இயக்த்தில் திரைக்குவந்த ஜெய்பீம் படம் பல்வேறு தளங்களிலும் பாராட்டை பெற்றது. படத்தின் மையக் கருவாக அமைந்த மறைந்த ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் படக்குழுவினர்களுக்கும் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், ஜெம்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா, ராஜாக்கண்ணுவாக நடித்த மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் படக்குழுவினர் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ஜெய்பீம் போன்ற படங்களுக்கு இடையூறு ஏற்பட்டால் எதிர்காலத்தில் களப்போராட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என விழாவில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com