\
தஞ்சாவூர் : காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய 4 பேர்

தஞ்சாவூர் : காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய 4 பேர்

தஞ்சாவூர் : காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய 4 பேர்
Published on: 

தஞ்சாவூரில் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரை கத்தியால் குத்த முயன்ற 4 பேரில் ஒருவர் மட்டும் பிடிபட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கல்லணை பாலத்தில் நேற்றிரவு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் சுற்றிய 4 பேரை, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளையை தாக்கினர்.

மேலும் கத்தியால் குத்தவும் முயன்றனர். மற்ற காவலர்கள் காவல்நிலைய கதவை சாத்தியதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் தப்பியோடினர். பின்னர் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது, அப்பகுதி மக்களின் உதவியுடன் ஒருவரை காவல்துறையினர் பிடித்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com